2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை | தினகரன்

2nd Test: SLvENG; 278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (16) தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றய ஆட்டம் மழை காரணமாக சற்று நேர காலத்தோடு நிறைவுக்கு கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இங்கிலாந்து அணி 278 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக ஆடிய அணித்தலைவர் 124 ஓட்டங்களைப் பெற்றார். ஜோ ரூட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய ரோரி பர்ன்ஸ் 59 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய போதும் ஜோ ரூட் மற்றும் ரோரி பர்ன்ஸ் ஜோடி சீரான ஓட்ட வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து இலங்கை பந்து வீச்சாளர்களை சிரமத்துக்குள்ளாக்கியது. இங்கிலாந்து அணியின் இவ்விரண்டாவது இன்னிங்சில் 2 ஓவர்கள் மாத்திரமே ஓட்டமற்ற (maiden) ஓவர்களாக பதியப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

பின்னனியில் வந்து சிறப்பாக ஆடும் பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிசார்பில் அகில தனஞ்சய 6 விக்கட்டுக்களையும் தில்ருவன் பெரேரா 2 விக்கட்டுக்களையும் மலிந்த புஷ்பகுமார 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 290 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் சாம் குர்ரான் 64 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் ரொஷேன் சில்வா 85 ஒட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இன்று போட்டியின் 4 ஆவது நாளாகும்.

முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 285+5/10 (75.4)

சேம் குர்ரன் 64 (119)
ஜோஸ் பட்லர் 63 (67)
ரொரி பேர்ன்ஸ் 43 (81)

தில்ருவன் பெரேரா 4/61
மலிந்த புஷ்பகுமார 3/89
அகில தனஞ்சய 2/80

இலங்கை 336/10 (103.0)
ரொஷேன் சில்வா 85 (174)
திமுத் கருணாரத்ன 63 (125)
தனஞ்சய டி சில்வா 59 (98)

ஜெக் லீச் 3/70
ஆதில் ரஷீத் 3/75
மொயின் அலி 2/85

இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து
324/9 (76)

ஜோ ரூட் 124 (146)
ரோரி பர்ன்ஸ் 59 (33)
பென் போக்ஸ் 51* 

அகில தனஞ்சய 6/106 (23)
தில்ருவன்்பெரேரா 2/87 (19)
மலிந்த புஷ்பகுமார 1/97 (26)

- அஸாப் மொகம்மட்


Add new comment

Or log in with...