2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள் | தினகரன்

2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்

2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்-2nd Test-SLvENG-SL 336

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கண்டி பல்லேகலவில் இடம்பெற்று வரும் இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று (15) ஒரு விக்கெட்டை இழந்து 26 ஓட்டங்கள் பெற்றிருந்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

இலங்கை அணி சார்பில் ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில், ஜெக் லீச் மற்றும் ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்றைய நாளுக்கான ஆட்டத்தின்போது, இலங்கை அணி வீரர்களால் இடம்பெற்ற விதி மீறல் காரணமாக தண்டனை ஓட்டங்களாக இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி வீரர்களான ரொஷேன் சில்வா மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் களத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில், ரொஷேன் சில்வா அடித்த பந்து 3rd Man (தேர்ட் மேன்) திசையில் எல்லைக் கோட்டை நோக்கிச் சென்றது. இதனையடுத்து, இரு வீரர்களும் பந்து எல்லைக் கோட்டை தொட்டுவிடும் என நினைத்து, ஓட்ட வேகத்தை தளர்த்தி சென்றனர். ஆயினும் பந்து எல்லைக் கோட்டிலிருந்து ஓரிரு சென்ரி மீற்றர் இடைவெளியில் எல்லைக்கோட்டுக்கு அண்மையில் நின்றது.

இதனைத் தொடர்ந்து, அப்பந்தை துரத்திச் சென்ற மொயின் அலி அதனை எடுத்த வீச முனைந்த போது, துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் இரண்டாவது ஓட்டத்தை பெற்றனர்.

இதன்போது, ரொஷேன் சில்வா முதலாவது ஓட்டத்தை பூரணப்படுத்தாது, எதிர்த் திசையிலிருந்து இரண்டாவது ஓட்டத்தை பெற்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் விதியின் 18.5.1 இற்கு அமைய, உரிய முறையில் ஓட்டத்தை பூர்த்தி செய்யாத நிலையில், எதிரணிக்கு தண்டனை ஓட்டங்களாக 5 ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (14) இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை குவித்தது. இன்றைய (15) நாளில் வழங்கப்பட்ட 5 ஓட்டங்களுடன் அவ்வணி 290 ஓட்டங்களை பெற்றதாக கணிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்து அணி இலங்கை அணி பெற்ற 336 ஓட்டங்களை அடுத்து, அவ்வணி 46 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை இன்று ஆரம்பித்தது.

அதற்கமைய இன்று ஒரு ஓவர் பந்துவீசப்பட்ட நிலையில் இன்றைய நாள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

நாளை (16) போட்டியின் மூன்றவாது நாளாகும்.

முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 285+5/10 (75.4)

சேம் குர்ரன் 64 (119)
ஜோஸ் பட்லர் 63 (67)
ரொரி பேர்ன்ஸ் 43 (81)

தில்ருவன் பெரேரா 4/61
மலிந்த புஷ்பகுமார 3/89
அகில தனஞ்சய 2/80

இலங்கை 336/10 (103.0)
ரொஷேன் சில்வா 85 (174)
திமுத் கருணாரத்ன 63 (125)
தனஞ்சய டி சில்வா 59 (98)

ஜெக் லீச் 3/70
ஆதில் ரஷீத் 3/75
மொயின் அலி 2/85

இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 0/0 (1.0)


Add new comment

Or log in with...