4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது | தினகரன்

4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது-3 Arrested with 4008 Tramadol Drug Tablet Found-Minuwangoda

ட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008 இனை வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் மினுவாங்கொடை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (16) இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22, 48, 37 வயது உடையவர்கள் எனவும் அவர்கள் ராகமை மற்றும் கொட்டுகொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த போதை மாத்திரைகள் பெருமதி சுமார் ரூபா 12 இலட்சத்திற்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்றைய தினம் (17) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...