ரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது | தினகரன்

ரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது

ரூ. 7 கோடி, 7 கிலோ தங்கத்துடன்  சிங்கப்பூர் நாட்டவர் கைது-Gold Smuggling Singaporean Arrested at BIA

சுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) அதிகாலை ஒரு மணியளவில் சிங்கப்பூரிலிருந்து SQ468 விமானம் மூலம் இலங்கை வந்த 45 வயதான சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ. 7 கோடி, 7 கிலோ தங்கத்துடன்  சிங்கப்பூர் நாட்டவர் கைது-Gold Smuggling Singaporean Arrested at BIA

குறித்த சந்தேகநபர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவரிடமிருந்து 229 தங்க கைப்பட்டிகள் (Bracelet), 88 தங்க அட்டிகைகள் (நெக்லஸ் Necklace), 175 தங்கச் சங்கிலிகள், 16 வளையல்கள், 06 பென்டன்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ரூ. 7 கோடி, 7 கிலோ தங்கத்துடன்  சிங்கப்பூர் நாட்டவர் கைது-Gold Smuggling Singaporean Arrested at BIA

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Add new comment

Or log in with...