50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம் | தினகரன்

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்-Car Accident-Fell From Peek-AccidentNanu Oya Radella

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்.

இன்று (17) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டன் திசையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்-Car Accident-Fell From Peek-AccidentNanu Oya Radella

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த கார் வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, மேலும் இருவர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்-Car Accident-Fell From Peek-AccidentNanu Oya Radella

குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக, ஆரம் கட்ட விசாரணைகளின் பின்னர் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...