பொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி | தினகரன்

பொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி

சர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை விஸ்தரிப்பதற்கு நோர்வே 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர் தொர்ப்ஜோக் கவ்ஸ்டட்சேத்தர் மற்றும் சர்வதேச தொழில் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் சிம்ரின் சிவ் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்தத் திட்டத்துக்கு அவுஸ்திரேலியாவும் நோர்வேயும் இணைந்து நிதியுதவி வழங்குகின்றன. வட மாகாணத்தில் உள்ள நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உள்ளூரில் கூட்டுறவு சங்கங்களை அமைப்பது மற்றும் அவற்றை வலுப்படுத்துவது, சிறிய தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற செயற்பாடுகளின் கீழ் இந்தத்திட்டம் உதவும்.


Add new comment

Or log in with...