இரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி | தினகரன்

இரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி

சுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில் கல்வான சந்திக்கருகில் போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டியுடன் இருவர் கைதாகியுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் ஹெரோயின் கடத்துவது தொடர்பில் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே 02 கிலோ ஹெரோயினுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முல்லேரியாவ, அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பிரசன்ன ரோஹித்த பெரேரா என்பவரும் கொஹிலவத்த வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஜகத் என்றழைக்கப்படும் டிரேவோ லொட்வைக் என்ற 51 வயது நபருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

லக்ஷ்மி பரசுராமன்

 

 

 


Add new comment

Or log in with...