டிரம்புக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கைது | தினகரன்

டிரம்புக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கைது

ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ட்ரோமியின் சார்பாக மைக்கல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்தார். செவ்வாய்க்கிழமை மைக்கலுக்கும், அவரிடமிருந்து பிரிந்த மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவரின் மனைவிக்கு காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு செய்தி ஊடகமொன்று இந்த கைது குறித்து புதன்கிழமை முதன்முதலாக செய்தி வெளியிட்டது. தனக்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக ஸ்ட்ரோமி கூறி வந்தார்.

ஆனால் டிரம்ப் இதனை மறுத்தார். மைக்கலுக்கு 2011 ஆம் ஆண்டு திருமணமானது. 2017ஆம் ஆண்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்தார். காயங்கள், வீக்கங்களுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு மைக்கல் மனைவி வெளியே சென்றதாக அந்த ஊடகம் கூறுகிறது. அவரது தாடையில் சிவப்பு தழும்புகள் இருந்ததாகவும் கூறுகிறது.

இந்த சம்பவம் குறித்து மைக்கலின் அலுவலகம் இது வரை கருத்து தெரிவிக்கவில்லை.


Add new comment

Or log in with...