25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி | தினகரன்

25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி

இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து கிட்டத்தட்ட இருபத்தி இரண்டரை கோடி கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை சென்றவடைவதற்கு தொழில்நுட்ப ரீதியிலும், மருத்துவ ரீதியிலும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள ரொக்கெட் தொழில்நுட்பத்தின்படி சென்றால் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு 9 மாதங்களாகும். பூவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயணிக்கும் போது கண்பார்வை பறிபோகவும், எலும்புகள் பாதிப்படையும் ஆபத்து உள்ளது.

மேலும் காஸ்மிக் கதிர்வீச்சும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவே விரைவாக செல்லும் விதத்தில் ரொக்கெட்டை உருவாக்க வேண்டியதும் அவசியமானது. இதற்கான பணிகளை இப்போதே ஆரம்பித்தால் தொழில்நுட்ப உதவியுடன் 25 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...