மேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றி | தினகரன்

மேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றி

மகளிர் 20 ஓவர் உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றியீட்டின.

மகளிர் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியதீவில் நடைபெற்று வருகிறது.

நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ’ஏ’ பிரிவில் உள்ள நடப்பு சம்பியன் மேற்கிந்தியதீவு அணி 31 ஒட்டங்களுக்கு தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய மேற்கிந்தியதீவு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆபிரிக்கா 18.4 ஓவர்களில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேற்கிந்தியதீவு அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இருந்தது. தென் ஆபிரிக்கா முதல் தோல்வியை தழுவியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 25 ஓட்டங்களுக்கு பங்களாதேஷை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி 72 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை அணி பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே தென் ஆபிரிக்காவிடம் தோற்று இருந்தது. பங்களாதேஷ் 3-வது தோல்வியை சந்தித்தது.


Add new comment

Or log in with...