சைபர் குற்றங்களை எதிர்கொள்வதற்கு இராணுவம் தயார் | தினகரன்

சைபர் குற்றங்களை எதிர்கொள்வதற்கு இராணுவம் தயார்

உலகில் இடம்பெறும் சைபர் குற்றங்கள் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு எதிர்கொள்ள நேரும் தடைகளை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு இலங்கை இராணுவம் தயாராக உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிரெதிராக நின்று யுத்தம் புரியும் எதிரிகளைப் போலல்லாது மறைந்திருந்து பாரிய குற்றங்களை மேற்கொள்ளும் குற்றவாளிகளால் உலகில் பெருமளவு நாடுகள் பாரிய பிரச்சினை களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:

பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் எமது தொடர்பாடல் சமிக்ைஞ பிரிவு படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து ள்ளதால் உலகில் சைபர் தாக்குதல்கள் அதிக ரித்து வருகின்றன.

எதிரிகளோடு சண்டையி டுவது எளிதானது. எனினும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து குற்றம் புரிவோரிடம் எமது சமிக்கை படையணி வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது. சைபர் குற்றம் தொடர்பில் மட்டுமன்றி எமது இராணுவ வீரர்கள் யுத்தத்திற்குப் பின்னர் மேலும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட மேலும் பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சைபர் பாதுகாப்பு மூலம் முக்கியமான தகவல்கள் எதிரிகளிடம் போய்ச் சேராமல் இருப்பது தொடர்பில் அவர்கள் கவனமாக செயற்படுகின்றனர்.

அதேவேளை எதிர்காலத்தில் முகம்கொடுக்க நேரும், அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் வெற்றிகரமாக முகம்கொடுக்கின்றனர்.

புதிதாக எழும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் பலம் எமது இராணுவத்திடம் உள்ளதாகத் தெரிவித்த இராணுவத் தளபதி ஏனைய நாடுகளுடனும் அந்நாடுகளின் பாதுகாப்பு பிரிவுகளுடனும் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொண்டு சைபர் குற்றங்களுக்கு எதிராக செயற்படுவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 


Add new comment

Or log in with...