ரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய சிம்பு | தினகரன்

ரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய சிம்பு

நடிகர் சிம்பு ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சிம்பு நடிப்பில் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவர் பென்ட்லே கொண்டினென்டல் ஜிடி எனும் சொகுசு காரை வாங்கி உள்ளார்.

இந்த காரின் மதிப்பு ரூ.3.30 கோடியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காரை சென்னையில் முதல் முறையாக வாங்கியது சிம்பு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த காரில் ஹைதரபாத்தில் அவர் சென்ற புகைபடங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Add new comment

Or log in with...