பாதுகாப்பு அதிகாரியை நீக்க மிலேனியா டிரம்ப் கோரிக்கை | தினகரன்

பாதுகாப்பு அதிகாரியை நீக்க மிலேனியா டிரம்ப் கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மிலேனியா டிரம்ப், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை உதவியாளரைப் பணிநீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஒக்டோபரில் திருமதி டிரம்ப் ஆபிரிக்கா சென்றிருந்தபோது மிரா ரிக்கார்டெல் எனும் அந்த தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையோ அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மன்றமோ இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று பி.பி.சி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. திருமதி ரிக்கார்டெல் கடந்த 7 மாதங்களாக அமெரிக்கப் பாதுகாப்பு மன்றத்தில் தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே மிரா ரிக்கார்டெல்லை பதவியில் இருந்து நீக்குமாறு, ஜனாதிபதியிடம் டிரம்பிடம் மிலேனியா வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, டிரம்பின் அலுவலக விவகாரத்தில் மிலேனியா தலையிடுவதற்கு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...