அமெரிக்காவில் 8 பேரை கொன்ற குடும்பம் கைது | தினகரன்

அமெரிக்காவில் 8 பேரை கொன்ற குடும்பம் கைது

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் எட்டுப் பேரைத் திட்டமிட்டுக் கொலைசெய்த தம்பதியையும் அவர்களின் இரண்டு மகன்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எட்டாம் நபர் திருமணம் செய்துகொள்வதாக நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவராவார்.

கிராமப் பகுதி ஒன்றில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நால்வரும் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கூண்டோடு கொலைசெய்ய திட்டமிட்டு செயல்பட்டதோடு அந்தக் கொடுஞ்செயலை மறைத்தனர் என்றும் மாவட்ட அலுவலர் கூறினார். கொலைக்கான காரணம் குழந்தைப் பராமரிப்புத் தொடர்புடையது என பொலிஸார் கூறினர்.

மூன்று இல்லங்களில் ஏழு பேர் தலையில் துப்பாக்கிக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் பலர் தூங்கிக்கொண்டிருந்தபோது சுடப்பட்டனர் என்று பொலிஸ் கூறியது.


Add new comment

Or log in with...