அமெரிக்க காட்டுத் தீ: உயிரிழப்பு 50ஐ எட்டியது | தினகரன்

அமெரிக்க காட்டுத் தீ: உயிரிழப்பு 50ஐ எட்டியது

அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் வடக்கே, பியூட் கவுண்ட்டி என்ற இடத்தில் கடந்த வாரத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது.

இதேபோன்று தெற்கே, தவுசண்ட் ஓக்ஸ் மற்றும் சிமி வேலி ஆகிய இரு இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயும் காற்றின் வேகத்தில் மளமளவென பரவியதால், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...