39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம் | தினகரன்

39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்

செலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு

39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர் கொண்டஉதைபந்தாட்டபோட்டி 2018 இல்,செலான் வங்கி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.

கொழும்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் இடம்பெற்ற Bowl பிரிவில் செலான் வங்கி இந்த இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது

லீக் மட்டத்தில் அரையிறுதி ஆட்டம் வரை வங்கி தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவுசெய்திருந்ததுடன், அரையிறுதியில் கொமர்ஷல் லீசிங் அணியை 6–-5 எனும் புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி, இறுதியாட்டத்துக்கு ஸ்மார்ட் ஷேர்ட்ஸ் அணியுடன் மோதியிருந்தது.

விறு விறுப்பாக இடம்பெற்ற போட்டியின் நிறைவில், 2-–0 எனும் புள்ளிகள் அடிப்படையில் ஸ்மார்ட் ஷேர்ட்ஸ் அணி வெற்றியீட்டியிருந்தது.

செலான் வங்கி ஊழியர்கள் தமது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் சிறப்பான வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

செலான் வங்கியின் உதைபந்தாட்ட அணியில் பிராசாந்த மனோஜ்,கவிந்தகினிகே,ஜசிந்து நிமசர,சுரங்க பெரேரா,பிரபாத் சுதர்ஷன, ஜெப்ரி இர்ஷாத்,தனுக பண்டார,சனுக பெர்னான்டோ,சிதும் விதானகமகே,சுபோதக ஸ்ரீயரட்ன,மொஹமட் இக்ரம்,முன்னால் அமர்ந்திருப்பவர் சமிக டி சொய்சா,சிறந்தகோல் காப்பாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...