வர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள் | தினகரன்

வர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்

வர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவன அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் ஆண்,பெண்களுக்கான சுப்பர் லீக் பிரிவுகளில் மாஸ் நிறுவனஅணி சம்பியன் பட்டங்களை வென்றிருந்ததுடன்,சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவில் பெண்களுக்கான சம்பியன் பட்டத்தையும் அந்த நிறுவனம் வெற்றிகொணடது.

அதிசிறந்த கரப்பந்தாட்டவீர,வீராங்கனைகளுக்கான விருதுகளையும் மாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வீரர்கள் தட்டிச் சென்றனர். இதன்மூலம் கடந்த காலங்களைப் போலமாஸ் நிறுவனம் வர்த்தக நிறுவன அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து100 இற்கும் அதிகமான அணிகள் பங்குபற்றியிருந்தன.

சுப்பர் லீக்,சம்பியன்ஷிப் மற்றும் ஏ பிரிவுஎன மூன்று பிரிவுகளுக்குமாக நடைபெற்ற இந்தபோட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் மஹரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளக அரங்கில் நடைபெற்றது.

சுப்பர் லீக் பிரிவு

ஆண்களுக்கான சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் டீ.ஜே லங்கா அணியை 25-22, 25-21, 25-16 புள்ளிகளுடன் 3க்கு 0 என்றநேர் செட் கணக்கில் வீழ்த்தி கட்டுநாயக்க மாஸ் க்ரீடாலெஷர்லைன் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் மீரிகம ப்ரெண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் மற்றும் மாவத்தகம மாஸ் கெஷுவலைன் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடிய மாவத்தகம மாஸ் அணி, 3க்கு 0 (25-9, 25-12, 25-8) என்றநேர் செட் கணக்கில் மீரிகம ப்ரெண்டிக்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டிப் பிரிவில் அதிசிறந்த வீரருக்கான விருதை மாஸ் க்ரீடா அணியின் திலன்த சம்பத்தும்,அதிசிறந்த வீராங்கானைக்கான விருதைமாஸ் கெஷூவலைன் அணியின் தக்ஷிலா மதுரங்கி பெற்றுக்கொண்டார்.

சம்பியன்ஷிப் பிரிவு

ஆண்களுக்கான சம்பியன்ஷிப் பிரிவு இறுதிப் போட்டியில் எக்ஸ்போ லங்கா அணியை எதிர்த்தாடிய ஓஷன் லங்காஅணி, 3க்கு 0 என்றநேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவாகியது.

பெண்கள் பிரிவில் நடப்புச் சம்பியனான ஒமேகாலைன் பிறைவெட் லிமிடெட் அணியை 3க்கு 0 என்றநேர் செட் கணக்கில் வீழ்த்தி மாவத்தகம கெஷூவலைன் அணிவெற்றியைப் பதிவுசெய்தது.

ஏ பிரிவு

ஏ பிரிவில் ஆண்கள் சம்பியன் பட்டத்தை எக்ஸிமோபெஷன் அணியை 3க்கு 0 என்றநேர் செட் கணக்கில் வீழ்த்தி ஓமேகாலைன் பிறைவெட் லிமிடெட் அணியும்,பெண்கள் பிரிவு சம்பியன் பட்டத்தை பாணந்துறை மாஸ் யுனிச்செல்லா அணியை வீழ்த்தி மெலிபென் பிஸ்கெட் லிமிடெட் அணியும் வெற்றி கொண்டன.

பீ.எப் மொஹமட்


Add new comment

Or log in with...