தேர்தலில் போட்டியிடும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவர் மோர்தசா | தினகரன்

தேர்தலில் போட்டியிடும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவர் மோர்தசா

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி யின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா வருகின்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மோர்தசா, ஒருநாள் போட்டியில் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பங்களாதேஷில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

பங்களாதேஷில் அடுத்த மாதம் 23-ம் திகதி தேர்தல் நடக்கிறது. இதில் மோர்தசாவை களம் இறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி ‘லீக்’ முடிவு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட மோர்தசாவும் சம்மதித்துவிட்டார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. அவரது சொந்த தொகுதியான நரேலில் போட்டியிடுகிறார். ஆனால் இதுகுறித்து மோர்தசா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. 2009-ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் 252 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தற்போது பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வரும் வீரர் அரசியலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் மோர்தசா அரசியலில் களம் இறங்க எந்த சிக்கலும் இருக்காது.


Add new comment

Or log in with...