2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள் | தினகரன்

2nd Test: SLvENG; இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டையும் இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.

அவ்வணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக போர்ன்ஸ் மற்றும் ஜேக்கின்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.ஜேக்கின்ங்ஸ் ஒரு ஓட்டம் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் பேர்ன்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார்

ஸ்டோர்க்ஸ் இருவரும் ஆடிய போது ஸ்டோர்க்ஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் அணியின் தலைவர் ஜோ.ரூட் 14 ஓட்டங்களையும் பெற்ற வேளை ஆட்டமிழந்தார்.இங்கிலாந்து அணி சார்பாக பட்லர் 63 ஓட்டங்களையும் போர்ன்ஸ் 43 ஓட்டங்களையும் விக்கெட் காப்பாளர் போக்ஸ் 19 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தார்.இவர் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கன்னிச் சதம் பெற்றமை விசேட அம்சமாகும்.இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான எஸ்எம் குர்ரான் 64 ஓட்டங்களை ஒரு இக்கட்டான நிலையில் அணியை காப்பாற்றினார்.பின்னர் ஆதில் ரஷீத் 31 ஓட்டங்களை பெற்றமை இங்கு விசேட அம்சமாகும்.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக ஆடிய முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கருணாரத்தன 19 ஓட்டங்களுடனும் புஸ்பகுமார ஒரு ஓட்டத்துடன் களத்தில் உள்ளனர்.கெளசால் சில்வா 6 ஓட்டங்கள் பெற்றவேளை ஆட்டமிழந்தார் .

இங்கிலாந்து அணி சார்பாக லீச் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியை விட 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 259 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படுகிறது.

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக டில்ருவன் பெரேரா 4 விக்கெட்டையும் மலிந்த புஸ்பகுமார 3 விக்கெட்டையும் அணியின் தலைவர் லக்மால் ஒரு விக்கெட்டையும் தனஞ்சய 2 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 221 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று, தொடரில் 1--0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் தொடரை சமனிலைப்படுத்தும் நோக்கில் இலங்கை அணி நேற்று களமிறங்கியது.

பல்லேகலை மைதானத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இலங்கை அணி ஏற்கனவே 6 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் ஒரு வெற்றியினையும், இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் உபாதை காரணமாக இரண்டு வாரங்களுக்கு அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அணித் தலைவராக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் செயற்படுகிறார். சுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணிக்கு 3 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது.

தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தும் முகமாக ரொஷேன் சில்வா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற ரங்கன ஹேரத்துக்கு பதிலாக மலிந்த புஷ்பகுமார சுழற்பந்து வீச்சாளராக அழைக்கப்பட்டார்.

உபாதைக்குள்ளாகியிருந்த ஜொனி பெயார்ஸ்டோ இன்றைய போட்டியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இங்கிலாந்து அணி எவ்வித மாற்றங்களும் இன்றி களமிறங்கியது.

இலங்கை அணி

சுரங்க லக்மால் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, தனன்ஜய டி சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, மலிந்த புஸ்பகுமார

இங்கிலாந்து அணி

கீடொன் ஜென்னிங்ஸ், ரோய் பர்ன்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போகஸ், ஆதில் ரஷீட், செம் கரன், ஜெக் லீச், ஜேம்ஸ் எண்டர்சன்


Add new comment

Or log in with...