மரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர் | தினகரன்

மரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்

அவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அவுஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 29 ஒருநாள் போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 45 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 முறை ரி 20 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் கூறுகையில், ‘கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து இரத்த வாந்தி எடுத்தேன்.

பந்துவீச்சு செய்யும் போது நுரையீரலில் இரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ என மன வேதனையுடன் அறிவித்தார்


Add new comment

Or log in with...