மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர் | தினகரன்

மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவையும் தொடர்ந்து செயற்படும் எனத் தெரிவித்த அமைச்சர், தேவைப்படும் போது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அறிக்கையை ஜனாதிபதியும் அரசாங்கமும் நிராகிரத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாராளுமனற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் முயற்சியிலேயே  இடம்பெற்றது.

சாதாரணமாக பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளையின் கீழ் அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் அமைப்பிலுள்ள 1.48 (2) சரத்தின்படி பாராளுமன்றத்தின் நிலையிற்கட்டளையை தயாரிப்பது அரசியல் அமைப்பிற்கு இணங்க பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியதேயாகும்.

இதங்கிணங்க நேற்று முன்வைக்கப்பட்ட பிரேரணையைச் சமர்ப்பிப்பதற்கு வேண்டுமானால் முறையொன்று உண்டு. நிலையியற் கட்டளையின் 135 சரத்தின் கீழ் எம். ஏ. சுமந்திரன் நிலையியற்கட்டளையை இடைநிறுத்துமாறு யோசனையை முன்வைத்தார். அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

நேற்றைய தினத்தின் நிகழ்வுகளாக ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டும் வர்த்தமானியை செயற்படுத்துவதே சபாநாயகர் கரு ஜயசூரியவின் நடவடிக்கையாகும்.

ஆனாலும் சுமந்திரன் எம். பி. முன்வைத்த பிரேரணையுடனே வாக்களிப்புக்குத் தயாரானதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...