அரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை | தினகரன்

அரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை

அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 26ஆம் திகதி மு பதவியில் இருந்த பிரதமர் மாற்றப்பட்டார். புதிய நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்புக்கு முரணான இந்த நியமனம் இடம்பெற்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு முரணாக கலைக்கப்பட்டது. இதற்கு எதிராக நான் உச்ச நீதிமன்றத்தில்முதல் மனுவை சமர்ப்பித்தேன். இந்நிலையில், உயர் நீதிமன்றம் , பாராளுமன்றம் கலைகக்கப்படுவதை இடை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்த மாதம் 16ஆம் திகதி வரை முதலில் ஒத்தி வைத்து பின்னர் அழுத்தங்கள் காரணமாக 14ஆம் திகதிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 122 எம்பிக்கள் இந்த அரசாங்கத்தின் மீதும் , பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அரசியலமைப்பை மதிப்பதற்கும் அதனை பின்பற்றுவதும் எல்லோரது கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...