ஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி | தினகரன்

ஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி

சபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவித்தல் தவறானது என யாரேனும் கூறுவார்களானால் மீண்டுமொருமுறை அது தொடர்பான யோசனையை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாகவு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

பாராளுமன்றத்தில் மக்களின் ஆணையை உறுதிப்படுத்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நாம் வெற்றிப் பெற்றுள்ளோம். கார்ட் போட் அமைச்சரவை எந்தவித அதிகாரமும் அற்றது. உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவிற்கும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்.

சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டும் போது ஜனாதிபதி கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் கட்சி தலைவர்கள் கூடும் போது நிலையியல் கட்டளையை நீக்குவதற்கு சுமந்திரன் எம்.பி யோசனையை கொண்டு வந்தார்.

அதற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. அதன்பின்னர் ஜே.வி.பி எம்.பி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தார்.சபாநாயகர் குரல்கள் மூலம் வாக்கெடுப்பை நடத்தினார். இறுதியில் யோசணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த யோசணை 122 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாங்கத்தின் சட்ட விரோத உத்தரவுகளை ஏற்க வேண்டாமென அரச அதிகாரிகளையும் மற்றும் பொலிஸாரையும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


Add new comment

Or log in with...