IOC பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல் (UPDATE) | தினகரன்

IOC பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல் (UPDATE)

பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்-Fuel Price Reduced; Effect From Today Midnight

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 2 இனாலும், டீசலின் விலை ரூபா 11 இனாலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய

IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 155 இலிருந்து ரூபா 153 ஆக ரூபா 2 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 129 இலிருந்து ரூபா 118 ஆக ரூபா 11 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல் Nov 01, 10.32pm

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 10 இனாலும், (Auto) டீசலின் விலை ரூபா 7 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (02) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பிரமர் மஹிந்த, நிதியமைச்சைப் பொறுப்பேற்றதை அடுத்து, எரிபொருள்களின் விலை இவ்வாறு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய

CPC - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 155 இலிருந்து ரூபா 145 ஆக ரூபா 10 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 123 இலிருந்து ரூபா 116 ஆக ரூபா 7 இனாலும் குறைக்கப்பட்டுள்ளன.

 


Add new comment

Or log in with...