பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை-JVP No Confidence Motion Against PM and Govt

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை-JVP No Confidence Motion Against PM and Govt

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (14) மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தார்.

இதேவேளை இன்று (14) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இன்றைய கட்சியை தலைவர்கள் கூட்டத்திலும் பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கு பற்றுவார்கள் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய ஆளும் தரப்புக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை வகிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


Add new comment

Or log in with...