சீனாவில் நாய் ஒன்று மரணித்த தனது எஜமானனுக்காக பரபரப்பான வீதியில் 80 நாட்கள் காத்திருக்கும் காட்சி இணையதள சமூகத்தின் இதயங்களை தொட்டுள்ளது.
ஹொங்டொட் என்ற வீதியின் நடுவில் அந்த நாய் ஏக்கத்துடன் பார்த்திருக்கும் வீடியோ காட்டிசியை சீனாவின் பிரபல வெய்போ வலைப்பூவில் 1.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி தனது எஜமான் உயிரிழந்த பின் இந்த வீதியில் ஒவ்வொரு நாளும் இந்த நாயை காண முடிந்ததாக அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாய்க்கு உதவ முயன்றாலும் அது ஓடிவிடுவதாக வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “ஓட்டுநர்கள் உணவுகளை கொடுக்கின்றபோது, நாம் அதனை பிடிக்க நெருங்கும்போது அது ஓடிவிடுகிறது” என்று அந்த ஓட்டுநர் குறிப்பிட்டார்.
1920களில் தனது உரிமையாளர் இறந்த பின்னர் ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்திற்கு சென்ற ஹச்சிகோ என்ற நாய் ஜப்பானில் அதிக பிரபலம் பெற்றதாகும்.
Add new comment