ஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம் | தினகரன்

ஸ்பைடர் மேனை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் மரணம்

மார்வல் கேலிச்சித்திரத்தை உருவாக்கிய அமெரிக்கக் கலைஞர் ஸ்டான் லீ தனது 95 ஆவது வயதில் காலமானார்.

பண்டாஸ்டிக் போர், ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், இன்கிரடிபில் ஹல்க் போன்ற பல பிரபல கேலிச்சித்திரங்களை உருவாக்கிய பெருமை அவரைச் சேரும். இயக்குநர், நிர்வாகத் தயாரிப்பாளர், நடிகர் என ஸ்டான் லீ பல பரிமாணங்களை எடுத்தவராவார்.

குறிப்பாக 1961ஆம் ஆண்டு, லீ மற்றும் வரை கலைஞர் ஜேக் உருவாக்கிய பண்டாஸ்டிக் போர் கதாபாத்திரங்கள்தான் அவருக்கு பெரும் புகழையும் ஈட்டித் தந்தது. 1939ஆம் ஆண்டு முதல், கேலிச்சித்திரப் படைப்புலகில் கோலோச்சிய லீ, கடந்த சில ஆண்டுகளாக நிமோனியா உட்பட நோய்கள் காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைகள் பெற்று வந்தார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் உயிரிழந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது.

மார்வல் கமிக்ஸ் செல்வாக்காக இருந்த காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆனது.


Add new comment

Or log in with...