கலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு | தினகரன்

கலிபோர்னிய காட்டுத் தீ: உயிரிழப்பு 42 ஆக உயர்வு

கலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கே உள்ள பெரடைஸ் நகரத்தில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறைந்தது 228 பேரை காணவில்லை.

காட்டுத்தீ இன்னும் எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயினால் இதுவரை 7,000 கட்டடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. 15,500 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

1933 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட கிரிபித்ஸ் பார்க் தீ விபத்தைவிட இது மோசமானது என்று குறிப்பிடப்படுகிறது. அந்தத் தீ விபத்தில் 31 பேர் இறந்தனர்.

இந்த காட்டுத் தீயினால் 300,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

தற்போது அங்கு நிலவும் வறண்ட பருவநிலையும், வேகமாக வீசும் காற்றும் தீ மேலும் பரவ வகைசெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...