2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம் | தினகரன்

2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்

2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (14) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிக்கு சுரங்க லக்மால் தலைவராக செயற்படவுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 எனவும், ஒரே ஒரு ரி20 போட்டியையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டெஸ்ட் தொடரை வெற்றி பெறும் நிலை காணப்படுகின்றது.

அந்த வகையில் இப்போட்டியை எவ்வகையிலாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதன் மூலம், இத்தொடரில் உயிர்ப்பு நிலையை பெறலாம் எனும் நிலையில் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் விபரம்

இலங்கை:
குசல் சில்வா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்திவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் திகவெல்ல (வி.கா), தனஞ்சய டி சில்வா, தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால் (தலைவர்), அகில தனஞ்சய, மலிந்த புஷ்பகுமார

இங்கிலாந்து:
ரொரி பேர்ன்ஸ், கீட்டன் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜொய் ரூட் (தலைவர்), மொயின் அலி, பென் போக்ஸ் (வி.கா.), சேம் குர்ரன், ஆதில் ரஷீத், ஜெக் லீச், ஜேம்ஸ் அண்டர்சன்


Add new comment

Or log in with...