பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு | தினகரன்

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet

பாராளுமன்றம் நாளை (15) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூச்சல் குழப்பத்தை அடுத்து பாராளுமன்றத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு கூடிய புதிய பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை தாங்கினார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, ஆகியோர் இன்றைய தினம் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர்.

காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூறியதை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை ஒத்திவைக்குமாறு யோசனை ஒன்றை முன்வைத்தார். இதனையடுத்து ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்றத்தை நாளை (15) வரை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து நிலையியற் கட்டளைகள் ஒத்தி வைப்பது தொடர்பான யோசனைக்கு சபாநாயகர் வாக்கெடுப்பொன்றை மேற்கொண்டார். வாய் மொழி மூலம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்ததோடு, ஜே.வி.பி. எம்பி விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

அதனை கருத்தில் எடுத்த சபாநாயகர், அது தொடர்பான வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதற்கு மத்தியில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், வாய் மொழி மூலம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளதன் காரணமாக நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், பாராளுமன்றத்தை நாளை (15) காலை 10.00 மணி வரை ஒத்திவைப்பதற்கான லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பியின் யோசனைக்கு அமைய, சபையின் அனுமதி கிடைத்தது.

இதன் பின்னர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கையொப்பங்கள் பெறப்பட்டன. இதில் 122 எம்.பிக்கள் அதற்கு ஒப்புதல் கையெழுத்து இட்டனர்.

அதன் அடிப்படையில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 102 பாராளுமன்ற உறுப்பினர்களும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளிட்ட 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதில் தற்போதைய அரசாங்கத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட வடிவேல் சுரேஷ், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோர் இதில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் குறித்த ஆவணம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet

பாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு-No Confidence Motion Against MR and His Cabinet


Add new comment

Or log in with...