வடமராட்சியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை | தினகரன்

வடமராட்சியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேற்படி காணி விடுவிப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொது மக்களது காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறு கூறியிருப்பதுடன், விடுவிக்கப்படும் காணிகள் தொடர்பான விபரங்களை தனக்கும் அனுப்பி வைக்குமாறும், யாழ்.மாவட்ட செயலாளருக்கும் அறிவித்தல்களை வழங்கியுள்ளார்.

அந்தவகையில், மேற்படி காணிகள் மிக விரைவில் பொது மக்களது பயன்பாட்டுக்கென விடுவிக்கப்படவுள்ளன.

எனவே வடமராட்சி கிழக்கில் இதுவரை காலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்கள் தமது காணிகளை பெற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...