இலங்கையில் நீதித்துறை சுதந்திர செயல்பாடு | தினகரன்

இலங்கையில் நீதித்துறை சுதந்திர செயல்பாடு

உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பானது நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயற்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச மற்றும் உள்நாட்டு இராஜதந்திரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் கலைப்புத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ள தீர்ப்பு இலங்கை நீதித்துறையில் ஜனாதிபதியினதோ அல்லது வேறு அரசியல் தலைவர்களினதோ தலையீடு இடம்பெறவில்லை என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மேற்படி நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையில் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து நீதித்துறை எந்தத் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்படுகின்றது என்பதை வரலாற்று ஆவணங்களை ஆதாரமாகக்காட்டி அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். (ஸ)


Add new comment

Or log in with...