வட மாகாணத்தில் 82 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு | தினகரன்

வட மாகாணத்தில் 82 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தெரிவில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கினார்.

யாழ் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (13) காலை நடைபெற்றது.

முகாமைத்துவ உதவியாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், பயிற்சியாளர்கள், கடல்நீர் வளத்துறை போதனாசிரியர்கள் என மொத்தம் 82 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆளுநர் வழங்கினார்.

இதில் ஆளுநரின் செயலர் இ. இளங்கோவன், உதவிச் செயலர் ஏ.எக்ஸ். செல்வநாயகம், விவசாய அமைச்சின் செயலர் க. தெய்வேந்திரம், பதில் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகனதாஸ், இ.வரதீஸ்வரன் மாகாணசபை செயலாளர், ரூபினி வரதலிங்கம் மகளிர் விவகார அமைச்சு, வடமாகாண திணைக்கள ஆணையாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

யாழ். விசேட நிருபர்


Add new comment

Or log in with...