முப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் சந்திப்பு | தினகரன்

முப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் சந்திப்பு

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி உட்பட முப்படைத் தளபதிகள் புதிய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றும், நேற்று முன்தினமும் இந்த சந்திப்புகள் நடைபெற்றன.

முதலாவதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் அவரைத் தொடர்ந்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் தமது சந்திப்பை நினைவு கூரும் பொருட்டு நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கும் புதிய பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதன் போதும் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...