அமைச்சரிடம் கேள்வி கேட்டதால் அ.தி.மு.க கூட்டத்தில் ரகளை | தினகரன்

அமைச்சரிடம் கேள்வி கேட்டதால் அ.தி.மு.க கூட்டத்தில் ரகளை

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்குபெற்ற கூட்டத்தில் நேற்று அடிதடியுடன் சலசலப்பு ஏற்பட்டது. அதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

தற்போதைய ஆளும் அதிமுக, அரசிற்கு எதிராக மக்கள் யார் கேள்வி கேட்டாலும் அவர்களை அடக்குவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது. அரசை விமர்சித்தாலோ, அரசின் திட்டங்களை எதிர்த்து பேசினாலோ காவல் துறையை ஏவி அவர்களை அடக்குவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது. இதற்கு பல சமூக ஆர்வலர்களை அதிமுக தொடர்ச்சியாக கைது செய்வதே மிகப்பெரிய சான்றாகும். படத்தில் கூட அரசியலை விமர்சித்துப் பேச கூடாது என கூறுவது தான் இந்த அரசின் உச்சக்கட்ட அராஜகமே. கேள்வி கேட்டாலே தப்பு என்றால் மக்களிடம் எதற்கு இவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருள் பழுதடைந்தாலே கடைக்காரரிடம் கேள்வி எழுப்பும் நமக்கு நமது வாக்கின் மூலம் ஆட்சியில் அமரும் இவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை என்று மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்குபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்பான மற்றொரு அதிமுக கோஷ்டியினர் கேள்வி எழுப்பிய நிர்வாகிகளை அங்கிருந்து அடித்து துரத்தினர். இதனால் அந்த கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Add new comment

Or log in with...