ஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது | தினகரன்

ஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது

ஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபர்ரி பழங்கலில் ஊசி வைக்கப்படுவது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

7 வெவ்வேறு சம்பவங்களில் ஸ்ட்ரோபர்ரி பழங்களில் ஊசிகளை வைத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண் பொலிஸாரினால் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் யுட் ட்ரின் என்ற அந்தப் பெண்ணுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ஒரு நீண்ட மற்றும் கடினமான விசாரணைக்குப் பின்னர் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ட்ரோபர்ரி மட்டுமல்லாமல் வேறு சில பழங்களிலும் தையல் ஊசிகள் காணப்பட்டதாகக் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 200 முறைப்பாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் ஸ்ட்ரோபர்ரி உற்பத்தித் துறை ஆட்டங்கண்டது.

முறைப்பாடுகளைத் தொடர்ந்து பல பேரங்காடி நிலையங்களிலிருந்து ஸ்ட்ரோபர்ரி பழங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டன. சில விவசாயிகள் கூடைகூடையாகப் பழங்களைத் தூக்கியெறிய நேரிட்டது.


Add new comment

Or log in with...