Home » தொற்றாநோயை கட்டுப்படுத்த ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு 500 மில்லியன் யென்

தொற்றாநோயை கட்டுப்படுத்த ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு 500 மில்லியன் யென்

by sachintha
December 7, 2023 6:53 am 0 comment

முதற்கட்டமாக 49 மில்லியனை கையளித்தது ஜப்பான்

இலங்கையில் தொற்றா நோய்களை (NCD) கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்கும் நோக்கில் ஜப்பானிய மக்கள் 500 மில்லியன் யென், பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பொதுவைத்தியசாலைக்கு வழங்கினர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் நேற்று (06) இதற்கென முதற்கட்டமாக 49 மில்லியன் யென் வழங்கப்பட்டது.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜப்பான் குடியரசின் தூதுவர் Mizukoshi Hdeaki தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதற்கான முதற் கட்டமாக Angio-CT இயந்திரத்துக்கு தேவையான கருவிகள், கதிரியக்க கருவிகள் (ஆஞ்சியோ-CT இயந்திரம்), அறுவைச் சிகிச்சை கருவி Unit, கண் கருவிகள் (தானியங்கி) ரிஃப்ராக்டோ மீட்டர் மற்றும் மூன்று ஸ்லிட்லேம்கள், மூன்று தீவிர சிகிச்சை படுக்கைகள் வழங்கப்பட்டன.

ஜப்பான் தூதுவர் Mizukoshi Hideaki, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிடம் மேற்படி உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.இதை, ஸ்ரீஜயவர்தனபுர பொதுவைத்தியசாலையின் தலைவர்டொக்ர் நிஹால் ஜயதிலகவிடம் சுகாதார அமைச்சர் கையளித்தார். இந் நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர். ரத்னசிறி ஏ.ஹேவகே மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் உட்பட சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT