OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம் | தினகரன்

OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்

OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்-OPPO A7 Pre Order Started

OPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

A7 இன் விலை ரூபா. 45,990 ஆக காணப்படுவதுடன், புதிய OPPO A7 நடுத்தர அம்சங்களை கொண்ட தொலைபேசியாக அமைந்திருக்கும். 16 Mega-Pixel முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், AI 2.0 ஐயும் அடங்கியுள்ளது. 13MP+2MP இரட்டை பின்புற கமராவைக் கொண்டுள்ளதுடன், 4230mAh பாரிய பற்றரியையும் கொண்டுள்ளது.

OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்-OPPO A7 Pre Order Started

இலங்கையின் பெருமளவான வாடிக்கையாளர்களை OPPO A7 சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். அங்கிகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து தமது தொலைபேசிகளை முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு விசேட அன்பளிப்பு திட்டமொன்றையும் முன்னெடுக்க OPPO முன்வந்துள்ளது.


Add new comment

Or log in with...