தமிழக படக்குழுவினர் 140 பேர் இமாச்சலில் சிக்கி தவிப்பு | தினகரன்

தமிழக படக்குழுவினர் 140 பேர் இமாச்சலில் சிக்கி தவிப்பு

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘தேவ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு, மணாலியில் இந்த வாரம் நடக்க இருந்தது. இதற்காக நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட 140-க்கும் மேற்பட்ட படக்குழுவினர் அங்கு சென்றனர்.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்த்தி கூறியிருப்பதாவது:

‘தேவ்’ படத்தின் சில காட்சிகளை குலு, மணாலியில் மழை, பனிச்சாரலுக்கு நடுவே படம் பிடிக்கலாம் என்று முடிவு செய் திருந்தோம். ஆனால் 23-ம் திகதி திடீரென நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 5 மணி நேரம் வரை காரிலேயே இருந்தேன். பிறகு அருகில் உள்ள கிராமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அங்குதான் தங்கியிருக்கிறேன் என்றார். திருச்சி காட்டூர் மான்போர்ட் தனியார் பள்ளியின் 31 மாணவ, மாணவிகள் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 40 பேர் கடந்த 20-ம் திகதி இமாச்சல பிரதேசம் குலு மணாலிக்கு சுற்றுப்பயணம் சென்றனர். கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட் டுள்ளனர் என திருச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...