மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி; பேராதனை பல்கலை | தினகரன்

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி; பேராதனை பல்கலை

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

இலங்கை ஒரு மதசார்புடைய நாடு. இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மதங்கள் இம் மக்களின் ஆன்மீக, லௌகீக, வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. ஆனாலும் மதத்தின் பேரால் உலகில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அப்பிரச்சினை மனிதர்களின் வாழ்வை சிதைத்ததுண்டு. அவ்வாறின்றி பிறரின் உணர்வுகளை மதித்து அனைவரும் சம வழிபாட்டை மேற்கொள்ள இடமளிக்கும் ஓர் இடம் தான் இலங்கையின் பழம்பெரும் பல்கலைக் கழகங்களில் ஒன்றான பேராதனைப் பல்கலைக் கழகம். அப் பல்கலைக் கழகத்தின் மத பன்மைத்துவ ஏற்பாட்டையே நாம் இப்போது காணப்போகிறோம்.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

“கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக் கழகம் 75 ஆவது பவள விழாவைக் கொண்டாடியது. ஆரம்ப உப வேந்தர் ஐவர் ஜெனிங்ஸ் இப் பல்கலைக் கழகம் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கும் போது விஷேடமாக எமது நாட்டின் பன்மைத்துவம் பற்றி மக்களின் உணர்வுகள், தேவை பற்றி நன்றாக புரிந்து கொண்டு அடித்தளம் இட்டிருக்கிறார் என்பது இன்று நன்கு புரிகிறது. உண்மையில் எந்தவொரு சமூகத்திலும் அல்லது நிறுவனத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நபரொருவர் புத்தி சாதுர்யமான தூரநோக்குடையவராக இருப்பது முக்கியமான ஒன்றாகும். அவர் வெளிநாட்டவராக இருப்பினும் இந்த நாட்டினதும் மக்களினதும் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டவராக தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார்” என்று கூறினார் பாலி மற்றும் பௌத்த சமய பேராசிரியர் அதிவணக்கத்திற்குரிய முவ அட்டகம ஞானாநந்த தேரர்.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

“இப் பல்கலைக் கழகத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். கடந்தகாலங்களில் எமது நாட்டில் நடைபெற்ற இன, மத முரண்பாட்டுச் சம்பவங்களை எடுத்து நோக்கும் போது பல்கலைக் கழக 75 வருடகால வரலாற்றில் இது வரைக்கும் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதில்லை. எமது பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் சமய நடவடிக்கைகள் மற்றும் விசேட பூசைகளில் ஏனைய இன மாணவர்களும் கலந்து கொள்ளச் செய்வதில் எமது பல்கலைக்கழக இளம் மாணவர்கள் விருப்பத்துடன் செயற்படுகிறார்கள். ஏனைய அனைத்து இன மாணவர்களும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒற்றுமையாக கலந்துகொண்டு சிறப்பிப்பது இங்கு விசேடமான அம்சமாகும் என்று இப் பல்கலைக்கலகத்தின் மதவழிபாட்டு பன்மைத்துவத்தின் சிறப்பம்சத்தை எமக்குத் தெளிவுபடுத்தினார் அதிவணக்கத்திற்குரிய முவ அட்டகம ஞானாநந்த தேரர்.   

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

கல்விக் கூடம் என்பது பலவகையான அபிப்ராயங்கள், சுபாவங்கள் கொண்ட பலவகையான நபர்கள் ஒன்று கூடும் இடமாகும். சமயங்கள் கூட வெவ்வேறான கருத்துக்கள், சுபாவங்கள் கொண்டவர்களை ஒன்றுகூட்டி ஒற்றுமைப் படுத்துவதாகும். இவைகள் இரண்டும் அமையப் பெற்ற இப்பல்கலைக் கழகத்தில் இந்து, பௌத்த,கத்தோலிக்க,ரோமன் கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் சமய மதஸ்தலங்கள் நிறுவப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வருகின்றன.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

“இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள கிறிஸ்த்தவ மாணவர்களின் மத வழிபாடுகளை பூர்த்தி செய்வதற்காகவே இவ் ஆலயம் கட்டப்பட்டது. உண்மையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் சமய ஒருமைப்பாடு காணப்படுகின்றது. அனைத்து சமயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மத ஸ்தலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உண்மையில் பேராதெனியப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் இருந்து சமய நடுநிலைமை பேணப்பட்டு வந்துள்ளது. எமது தேவாலயங்களில் கிறிஸ்த்தவ மத மாணவர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் உகந்தாப் போல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். அனைவரும் அதில் பங்கு கொள்வர். ஆகவே இவ்வாறான மதஸ்தலங்களின் ஊடாக நாம் மத வேறுபாடுகளை உருவாக்காது மத இணக்கப்பாட்டினையே ஏற்படுத்துகின்றோம். வெவ்வேறு காரணங்களுக்காக மாணவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பினும் ஒருபோதும் இனமுரண்பாடுகள் ஏற்படவில்லை. என்று உறுதிபடத் தெரிவித்தார் கிறிஸ்த்தவ மத குருவான லலித் குணதிலக அவர்கள். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கிறிஸ்த்தவப் பாட விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றுகிறார்.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

“எமது மதஸ்த்தலம் உட்பட பல்கலைக்கழக வளாகத்தினையும் சுத்தம் செய்யும் பணி ஒன்றினையும் முன்னெடுத்தோம். அதன்போது எமது அழைப்பினை ஏற்று ஏனைய மத மாணவர்களும் குறித்த சிரமதானத்தில் பங்குபற்றினர். நாம் மற்றுமொரு நிகழவாக பைபிலின் வரலாறு குறித்து தெளிவுபடுத்தும் அமர்வு ஒன்றினையும் ஏற்பாடு செய்தோம். அதில் பிரதம பேச்சாளராக முஸ்லிம் மௌலவி ஒருவர் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் ஏனைய மத தலைவர்களும் கலந்து கொண்டனர். எமது பள்ளிக்கு ஏனைய மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருகை தருவதில் எவ்வித தடைய்யுமில்லை. அவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்றாற் போல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்;” என்றும் மதகுருவான லலித் குணதிலக தமது மத ஸ்த்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை பெருமையுடன் தெரிவித்தார்.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

பிற மதங்களை மக்கள் அறிந்து கொள்ளாது அவை பற்றி தப்பவிப்ராயங்களை வைத்திருப்பார்கள். அவற்றால் தான் சந்தேகங்கள், குழப்பங்கள் ஏன் வன்முறைகள் கூட ஏற்படுகின்றன. அவற்றை லலித் குணதிலக போன்ற மதகுருக்கள் இங்கு நன்குணர்ந்து செயற்படுகின்றார்கள்.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

“இந்த கோவில் பல்கலைக்கழகத்தால் நிர்மாணிக்கப்பட்டது. நானும் பிரதம குருவும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். கோவில் கடமைகளைப் புறிவதற்காக இங்கு வந்திருக்கிறோம். இந்தக் கோவிலை இப் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் விரிவுரையாளர்களும்இ மாணவர்களுமே நிர்வகித்து வருகிறார்கள். இங்கு தைப்ப+சை அலங்கார உற்சவம்இ கும்பாபிசேகம்இ நவராத்திரிஇ கந்தசிஷ்டிஇ சிவராத்திரி விசேட பூசைகள் என பல வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவ் விசேட பூசைகளில் தமிழ் மாணவர்கள் உட்பட ஏனைய அனைத்து இன மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். அனைத்து மாணவர்களின் பங்கு பற்றுதலானது எங்களை மகிழ்ச்சியடையச் செய்வதுண்டு என பேராதனை பல்கலைக்கழக குறிஞ்சி குமரன் கோவிலின் பூசாரி கணபதிப்பிள்ளை சாருஜன் தெரிவித்தார்.    

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

பல்கலைக்கழக மாணவர்கள்இ விரிவுரையாளர்கள் மதங்கடந்து மொழிகள் கடந்து கலாசாரம் கடந்து அவர்கள் மனிதாபிமானத்தோடும் பிறமதங்களை, மனிதர்களை கண்ணியப்படுத்தும் நோக்கோடும் ஒன்று கூடுவதுதான் மிக முக்கியமான அம்சமாகும். அவ்வாறான தளத்தை இந்துக் கோவில் போன்ற வணக்கஸ்த்தளங்களும் அதன் மதகுருக்களும் இங்கு ஏற்படுத்துகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

“இந்தப் பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரத் தொழுகை நடைபெறுகின்றன. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் ஜும்மாத் தொழுகை நடைபெறுகின்றன. இந்த பள்ளிவாசல் இப்பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இனால் பரிபாலனம் செய்யப்படுகிறது. பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியன இணைந்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றௌம். இரத்த நன்கொடைஇ ரமழான் இப்தார் ஏற்பாடுகள் போன்றவற்றை ஏனைய மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்குபற்றுதலோடு மேற்கொண்டு வருகின்றௌம். அதேபோன்று இங்கிருக்கும் மதஸ்தாபனங்களின் தலைவர்களோடு நெருங்கிய தொடர்போடும் நல்லிணக்கத்தோடும் நாங்கள் செயற்பட்டு வருகின்றௌம்” என்று பேராதெனிய பல்கலைக்கழக பள்ளிவாசலின் இமாமான மௌலவி மொஹமட் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

மதஸ்த்தலங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு வழிவகுப்பதாகும். எந்தவொரு மதமாக இருந்தாலும் அது அவ்வாறான நோக்கத்துடனேயே இருக்கிறது. அதனது வழிபாட்டுத்தலங்கள் மனிதர்களுக்கு ஆத்மீக திருப்தியை பெற்றுக் கொடுக்கின்றன. ஆனால் இவைகளெல்லாம் சிறந்த வழிகாட்டலுடனேயே நடத்தப்பட வேண்டும். மதங்கள் மனிதர்களுடைய நடவடிக்கைகளை வணக்கஸ்த்தலங்களில் முடக்கிப் போடவில்லை. அவை அவற்றையும் கடந்து முழு வாழ்கையோடும் தொடர்புபடுத்துகிறது. அதற்கான வழிகாட்டல்களும் வாய்ப்புகளும் இங்குள்ள வணக்கஸ்தலங்களின் மௌலவி மொஹமட் ஹிஸ்புல்லாஹ் போன்ற மதத் தலைவர்களினால் ஏற்படுத்தப்படுவது பாராட்டத்தக்கதாகும்.

எனவே கல்வி நிறுவனங்களில் இவை இடம்பெறுமானால் அது சிறந்த ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பம் தொட்டு வெவ்வேறான மதக் கொள்கைகளை பின்பற்றும் இந்து, பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம் மாணவர்கள் தமது மதக் கொள்கைகளை பின்பற்றியவாறு தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரிகிறது.

மத பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனை பல்கலை-Peradeniya University-Religious Ethinicity-Fais

இந்நிலையில் பல்கலைக்ழக உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திஸாநாயக்க அவர்களைச் சந்தித்து பல்கலைக்கழத்தின் இந்த விசேட அம்சம் குறித்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்:

“நல்லிணக்கம் தொடர்பில் கதைக்கும் போது அதற்கு சிறந்த உதாரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தைக் குறிப்பிடலாம். ஏனெனில் 1942ஆம் ஆண்டில் பல்கலைகழகம் தொடர்பான எண்ணக்கருவினை உருவாக்கிய சேர் ஐவர் ஜெனிங்ஸ் இன்றைய பல்கலைக்கழக சூழலையும் நன்கு அறிந்து வைத்திருந்தார் என்றே கூறவேண்டும். வடக்கில் பாரிய யுத்தம் இடம்பெற்ற போதும் இங்கு சர்வமத மாணவர்களும் ஒற்றுமையாக தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இது உலகத்துக்கே நல்லிணக்கத்துக்கான சிறந்த உதாரணமாகும். அனைவரும் தமது மத நம்பிக்கைகளை முன்னெடுப்பதுடன் ஏனைய மத சகாக்கலுடன் இணைந்து வாழ முடியும். நாட்டினைப் பொருத்தவறை முஸ்லிம், இந்து, பௌத்த பாடசாலைகள் என பாகுபடுத்தியிருப்பதும் பிரச்சினைக்கு வழிவகுக்கும். முஸ்லிம் பாடசாலைகளில் இனவாத எண்ணக்கருக்கள் புகட்டப்படலாம். தனி இந்து பாடசாலைகளில் இனவாத கருத்துக்ள் புகட்டப்படலாம்.

எனினும் நாங்கள் ஒரே பாடசாலைக்குச் சென்றால் நாம் எல்லோரும் ஒரே தட்டில் வார்க்கப்படுவோம். எமது இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் போன்றௌர் நாட்டில் இவ்வாறு உருவானமைக்கு காரணம்இ அவர்கள் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் கல்வி பயின்றமையே. பாடசாலைகளில் இவ்வாறு இனவாத கருத்துக்கள் உள்வாங்கப்பட்ட போதும் பல்கலைக்கழகங்களுக்கு வரும்போது அந்த நிலை முற்றிலும் மாறுபடுகிறது. அதுவே பல்கலைக்கழகங்களின் விசேட அம்சமாகும்;. ஆக பொது பாடசாலைகள் இதற்கான முடிவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.”

பேராதெனிய பல்கலைக் கழகத்தின் உப வேந்தரின் கருத்து இங்கு ஊர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. மாணவர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததிகள். அவர்கள் இந்த நாட்டின் கலாசாரத்துக்கேற்ப நேர்மறையான சிந்தனைகளுடன் வளர்க்கப்பட வேண்டும். பிறமதங்களை மதித்து சகிப்புத் தன்மையுடன் வாழப்பழக்க வேண்டும். அதற்கான சு+ழல் உருவாக்கப்பட வேண்டும். அச்சூழலை உருவாக்க வேண்டியது இந்த நாட்டை வழிநடத்தும் அரசியல் தலைவர்கள்இ சமூகத் தலைவர்கள்இ மதத் தலைவர்கள் என ஒவ்வொருவரின் பொறுப்பாக இருக்கிறது. அந்தப் பொறுப்பை சரியாக செய்த ஒருவராகத்தான் பேராதெனிய பல்கலைக் கழக நிறுவுனரும் முதல் உபவேந்தருமான சேர் ஐவர் ஜெனிங்ஸ் பார்க்கிறௌம். அந்த தூரதிருஷ்டி எம் நாட்டு ஒவ்வொரு தலைவர்களிடம் வரவேண்டியது அவசியமாகும்.     

நாம் பல கலாசாரம்இ இனம்இ மொழிஇ மத பன்மைத்துவங்களைக் கொண்ட ஒரு நாட்டில் வாழ்கின்றௌம். இலங்கையில் இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம்இ 1915 இல் நடைபெற்ற கண்டிக் கலவரம்இ அண்மையில் நடைபெற்ற திகன வன்முறைச் சம்பவம் என்பன இந்நாட்டின் வளர்ச்சி மற்றும் நற்கீர்த்தி என்பவற்றுக்கு தடையாக அமைத்துள்ளன. அவற்றை இந்நாட்டின் மக்கள் அனைவரும் உணர வேண்டிய தேவையிருக்கிறது. அவற்றையெல்லாம் நாம் ஒரு பாடமாக எடுத்து ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலம் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பது அவசியமாகின்றது.

(ஏ. மொஹமட் பாயிஸ்)


Add new comment

Or log in with...