1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத் | தினகரன்

1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்

1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்-1st Test; SLvENG-Herath Retire with Loss v ENG

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

462 எனும் வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் 4 ஆம் நாளான இன்று (09) சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 53 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் தில்ருவன் பெரேரா மற்றும் கெளசால் சில்வா தலா 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மொயின் அலி 4 விக்கெட்டுக்களையும் ஜெக் லீச் 3 விக்கெட்டுக்களையும் ஆதில் ரஷீத் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸுக்காக இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. அறிமுக வீரராகக் களமிறங்கிய பென் போக்ஸ் 107 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. அஞ்சலோ மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 342 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. கீட்டோன் ஜென்னிங்ஸ் ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பென் போக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்-1st Test; SLvENG-Herath Retire with Loss v ENG

இதேவேளை இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. பல போட்டிகளில் வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்த ஹேரத் இன்றுடன் தனது கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இதுவரை மொத்தமாக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேரத் மொத்தமாக 25933 பந்துகளை வீசியுள்ளதுடன் 433 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவரது சிறந்த பந்து வீச்சுப் பெறுதியாக 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளதுடன் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சுப்பெறுதியாக 184 ஓட்டங்களுக்கு 14 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை போட்டியொன்றில் 5 விக்கெட்டுக்கள் 34 தடவைகளும் 10 விக்கெட்டுக்கள் 9 தடவையும் ஹேரத் வீழ்த்தியுள்ளமையும் சிறப்பம்சமாகும். இதில் ஒருதடவை ஹெட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்தியமையும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹேரத் கடந்த வருடம் உலகின் தலைசிறந்த இடது கை பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் நியுசிலாந்து அணியின் டேனியல் விட்டோரியை பின்தள்ளி முதலிடத்தை தக்கவைத்ததுடன் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் ஜோ ரூட்டின் விக்கெட்டை முதல் இன்னிங்ஸில் வீழ்த்தியதன் மூலம் ஒரு மைதானத்தில் 100 விக்கெட்டுக்களைப் பெற்ற 4 ஆவது வீரராக ஹேரத் வரலாற்றில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

ரங்கன ஹேரத்தின் இந்த பிரியாவிடைப் போட்டியை காண்பதற்காக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உட்பட பல முன்னனி கிரிக்கெட் நட்சத்திரங்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ்
இலங்கை 203/10 (68)
அஞ்சலோ மெத்திவஸ் 52 (122)
தினேஷ் சந்திமால் 33 (72)
நிரோஷன் திக்வெல்ல 28 (39)

மொயின் அலி 4/66 (21)
ஆதில் ரஷீத் 2/30 (9)
ஜெக் லீச் 2/41 (18)
ஆண்டர்சன் 1/26 (10)
குர்ரான் 1/16 (6)

இங்கிலாந்து 342/10 (97)
பென் போக்ஸ் 107 (202)
சாம் குர்ரான் 48 (104)
ஆதில் ரஷீத் 35 (38)
ஜோ ரூட் 35 (46)

தில்ருவன் பெரேரா 5/75 (30)
சுரங்க லக்மால் 3/73 (18)
ரங்கன ஹேரத் 1/78 (25)
அகில தனஞ்சய 1/96 (20)

இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 322/6d (93)
கீட்டோன் ஜென்னிங்ஸ் 146 (280)
பென் ஸ்டோக்ஸ் 62 (93)
பென் போக்ஸ் 37 (34)

ரங்கன ஹேரத் 2/59 (23)
தில்ருவன் பெரேரா 2/94 (30)
அகில தனஞ்சய 1/87 (18.5)

இலங்கை 250/10 (85.1)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 53 (92)
குசல் மெண்டிஸ் 45 (77)
தில்ருவன் பெரேரா 30 (49)
கெளசால் சில்வா 30 (59)

மொயின் அலி 4/71 (20)
ஜெக் லீச் 3/60 (21)
ஆதில் ரஷீத் 1/59 (18.1)
பென் ஸ்டோக்ஸ் 1/16 (8)


Add new comment

Or log in with...