பாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம் | தினகரன்

பாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

"பாராளுமன்றத்தைக் கலைத்து ஒரு வருடத்துக்கு முன்னரே தேர்தலை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ சர்வாதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட தேர்தலுக்கு இடமளிக்காது பாராளுமன்றத்தை மூடியமைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...