அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC | தினகரன்

அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC

அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்-Akila Dananjaya Bowling Action-Suspicious

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக வலம் வரும் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறை குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக ICC அறிவித்துள்ளது.

இது தொடர்பான பரிசோதனைகளுக்கு அகில தனஞ்சய அடுத்த 14 நாட்களுக்குள் உட்படுத்தப்படவுள்ளதுடன் இக்காலப்பகுதியில் அவரால் போட்டிகளில் பங்கேற்று பந்து வீச முடியும் எனவும் ICC தெரிவித்துள்ளது.

மஹேல ஜயவர்தனவினால் 2012 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட அகில தனது மாறுபட்ட பந்து வீச்சுப்பாணிக்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த வருடம் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களை சடுதியாக வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களின் பாராட்டுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளராக மாறி வரும் அகிலவின் பந்து வீச்சு முறைமை தடை செய்யப்படுமிடத்து அது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


Add new comment

Or log in with...