நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு | தினகரன்

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

ஒரே குடும்பத்தில் மூவர் உள்ளிட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டனர்

முல்லைத்தீவு, நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனவர்கள் உலங்குவானூர்தியின் உதவியுடன், மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஆண்டான் குளம் பகுதிக்கு அடுத்துள்ள நித்தகைக்குளம் நேற்று முன்தினம் (07) உடைப்பெடுத்திருந்தது.

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

இதில் ஆறு பேர் காணமல்போயிருந்ததோடு, பல நூற்றுக்கணக்கான பயிர் நிலங்கள் சேதமடைந்தன.

மேலும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினர், முப்படையினர், காவற்றுறையினர் மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் இணைந்து காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

இந்நிலையில் காணாமல் போயிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஏனைய மூன்றுபேரும் இன்று (09) காலை 7.00 மணியளவில் உலங்கு வானூர்தியின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனோர் மீட்பு-Mullaitivu Nithakaikulam Bust-6 People Rescued

(விஜயரத்தினம் சரவணன், முல்லைத்தீவு, எஸ்.என். நிபோஜன், வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன், )

Add new comment

Or log in with...