ஹபீஸின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது: களத்தில் முறையிட்டார் ரோஸ் டைலர் | தினகரன்

ஹபீஸின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது: களத்தில் முறையிட்டார் ரோஸ் டைலர்

பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீசும் முறை குறித்து நியூசிலாந்து அணியின் அனுபவமிக்க வீரரான ரோஸ் டைலர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் தனது அதிருப்தியைத் வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி ஐக்கியஅரபு இராச்சியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 ரி-20 போட்டிகள் கொண்டதொடரில் விளையாடிவருகிறது. ரி-20 தொடரை 3-0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

இந்தநிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அபுதாபியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ட்ரெட் போல்ட்டின் ஹெட்ரிக் சாதனையுடன் நியூசிலாந்துஅணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 266 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக டைலர் 80 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்தப் போட்டியின் 18ஆவது ஓவரில் ரோஸ் டைலர் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹபீஸின் பந்தை எதிர்கொண்டார். குறித்த ஓவரில் ஹபீஸ்,பந்து வீசும் முறை சரியல்ல எனச் சைகை மூலம் நடுவரிடம் தெரிவித்தார். அவர் பந்து எறிவதுபோல் உள்ளதாக அந்தசைகை இருந்தது. பந்துவீச்சாளர் 15 பாகைக்குமேல் தனதுகைகளைமடக்கக் கூடாது. அவரதுபந்துவீச்சுஅப்படி இருந்ததாக டைலர் நடுவரிடம் தெரிவித்தார். இந்த நிலையில்,போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்,டைலர் செய்தது தவறு. அப்படிசெய்வது அவரது பணியும் கிடையாது. அவரது செயல்பாடு எங்களை அவமானப்படுத்துவது போல் இருந்தது. அவரது வேலை துடுப்பொடுத்தாடுவது மட்டும்தான்.

அதில் அவர் கவனமாக இருந்தாலேபோது மானது. அவரது செயல் விளையாட்டு வீரருக்கு உகந்தது அல்ல என நடுவரிடம் தெரிவித்தேன். அவர் ஒருதொழில்சார் கிரிக்கெட் வீரர். இரண்டு மூன்றுமுறைஅவர் நடுவரிடம் அவ்வாறு செய்கை மூலம் தெரிவித்தார். அதுநடுவரின் பணி. ஹபீஸின் பந்துவீச்சில் எந்தத் தவறும் இல்லை,காரணமே இல்லாமல் டெய்லர் இதை ஒருபிரச்னையாக மாற்றிவிட்டார்.

எனவே ஹபீஸின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவொருதவறும் இல்லை என நம்புகிறேன். இதற்குமுன் இருந்த முறையற்ற பந்துவீச்சு முறையை அவர் மாற்றிக் கொண்டுள்ளாரே தவிர புதிதாக அவர் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

முன்னதாக சர்வதேசகிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறிபந்து வீசிய குற்றச்சாட்டில் ஹபீஸ் ஏற்கெனவே ஆண்டுகளில் 4 தடவைகள் தடைக்குள்ளார். சுமார் 14 வருடங்களுக்கு முன் அதாவது பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் முதற்தடவையாக போட்டித் தடைக்குள்ளானார்.அதன்பிறகு 2014ஆம் ஆண்டு சம்பின்ஸ் லீக் டி-20 தொடரிலும்,அதனைத் தொடர்ந்து 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் அவர் இவ்வாறு பந்து வீச்சு தடைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்தவிவகாரம் தொடர்பில் ஐசிசியிடம் பாகிஸ்தான் தரப்பில் போட்டி மத்தியஸ்தரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இதேபோல ஒரு சம்பவம் இடம்பெற்றது. சயீட் அஜ்மல் வீசிய தூஷ்ரா பந்து, தவறானது என ஷேன் வொட்சன் கள நடுவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பீ.எப் மொஹமட்


Add new comment

Or log in with...