நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும் | தினகரன்

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்-Weather Forecast-Rain Expected to Reduce From Saturday-Batticaloa

மட்டு. வலையிறவு பாலம் பெருக்கெடுப்பால் மாணவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காணைமாக பெரும் பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்-Weather Forecast-Rain Expected to Reduce From Saturday-Batticaloa

மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான பாலமான வலையிறவு பாலத்தின்மேலால் வெள்ளம் பாய்வதால் போக்குரத்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள.

இன்று காலை மட்டக்களப்பு நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் பெரும் அவலங்களை எதிர்கொண்டதை அவதானக்க முடிந்தது.

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்-Weather Forecast-Rain Expected to Reduce From Saturday-Batticaloa

வுவுணதீவ பிரதேசம் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கபடபட்ட பிரதேசமாகும். மட்டக்களப்பு நகரை நம்பியே அங்கு வாழும் மக்கள் உள்ளனர்.

அதிகமானோர் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதால் விவசாய உற்பத்திகளையும் நகருக்குள் கொண்டுவர முடியாமல் அவதியுறுகின்றனர்.

(மட்டக்களப்பு - ரீ.எல்.ஜவ்பர்கான்)

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும்

இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் செலவதால், நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நாளை மறுதினம் (10) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...