மழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு | தினகரன்

மழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு

மழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு-Alternate Method for Dry Fish in Rain Condition-Muttur-Trincomalee

தற்போது பெய்து வரும் அடை மழை காலம் என்பதால் மூதூர் பிரதேச மீனவர்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை பரண்களில் உலர வைக்க முடியாததினால் வித்தியாசமான முறையில் குழி வெட்டி, கோணிப் பைகளை இட்டு, அதன் மேல் மீன்களை உலர வைத்து வருகின்றனர்.

மழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு-Alternate Method for Dry Fish in Rain Condition-Muttur-Trincomalee

அதில் மிகையாக உப்பு இட்டு புதைப்பதோடு, அம்மீன்களை மீண்டும் மூன்று நாட்களுக்கு பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைத்தால் மீன்கள் நன்றாக காய்ந்து விடுமெனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு-Alternate Method for Dry Fish in Rain Condition-Muttur-Trincomalee

தற்போது பருவமழை பெய்து வருவதாலும், மீன்களை காய வைக்கும் பரண் அமைப்பதற்கு இடம் தட்டுப்பாடாக காணப்படுவதாலும் இவ்வாறு குழி தோண்டி புதைத்து மீன்களை காயவைப்பதாக மூதூர் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு-Alternate Method for Dry Fish in Rain Condition-Muttur-Trincomalee

இவ்வித்தியாசமான செயற்பாடு மூதூரில் பிரபல்யமடைந்துள்ளதோடு அதிகமான மீனவர்கள் இதனையே தற்போது கடைப்பிடித்து வருகின்றனர்.

(திருமலை மாவட்ட விசேட , மூதூர் தினகரன் நிருபர்கள்)

Add new comment

Or log in with...