சம்சுங் நிறுவனம் கைக்கணனியாக உருமாறும் கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. மடக்கும் திரை அதன் சிறப்பம்சமாகும். எதிர்வரும் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் அந்தக் கைபேசி தயாரிக்கப்படும் என்று சம்சுங்கின் மூத்த துணைத் தலைவர் ஜஸ்டின் டெனிசன் கூறினார்.
சான் பிரான்சிஸ்கோவில் அந்தப் புதிய கைபேசியை அவர் அறிமுகம் செய்தார். எனினும் அது எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
வருங்காலத்தில் கைபேசிகளின் முக்கிய அம்சமாக அதன் திரை விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார். “கைபேசியை விரித்தால் திரை பெரிதாகும். மடக்கினால் கைக்கு அடக்கமாகும்” என்று அவர் அதனை வருணித்தார். ‘இன்பினிட்டி பிளெக்ஸ் ஸ்கிரீன்’ எனும் அந்தத் திரை மடக்கித் திறப்பதற்காகவே செய்யப்பட்டது. மடக்கும் திரைக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய சம்சுங் ஆண்ட்ரொயிட் கூகுளுடன் இணைந்து பணியாற்றுகிறது.
Add new comment