அமெரிக்க மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம் | தினகரன்

அமெரிக்க மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.

இதில் அதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது. தாக்குதல் இடம்பெறும்போது அந்த மதுபான விடுதியில் கல்லூரி இசை விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு ஆரம்பமானதை அடுத்து மக்கள் அச்சத்தில் அங்குமிற்கும் ஓடியதாகவும் ஜன்னல் கண்ணாடிகளை உடத்துக் கொண்டு தப்பியதாகவும் அந்த விடுதிக்குள் இருந்தவர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...