ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் விளாசிய நியூசிலாந்து ஜோடி | தினகரன்

ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் விளாசிய நியூசிலாந்து ஜோடி

‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் சாதனை

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து பந்து வீச்சாளர் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான ‘ஃபோர்ட் டிராபி’யில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. ​ேநார்தன் அணியின் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தனர்.

சென்ட்ரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோபோல் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் அடித்தார்.

கடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூக்கினார். இதனால் வில்லெம் லடிக் 43 ஓட்டங்கள் வாரிக்கொடுத்து ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் அதிக ஓட்டங்கள் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் பங்களாதேஷில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக்கில் அலாவுதீன் பாபு 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சிம்பாப்வேயின் தலைவர் எல்டர் சிகும்புரா ஏழு பந்தில் நான்கு சிக்சர்ஸ், மூன்று பவுண்டரிகள் விளாசியுள்ளார்.


Add new comment

Or log in with...